சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த  செயற்பாடுகள் குறித்து  கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – உலகத் தமிழர் இயக்கம் ஆதரவு!

சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த  செயற்பாடுகள் குறித்து  கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – உலகத் தமிழர் இயக்கம் ஆதரவு! தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள். இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான…

மாவீரர்களின் இலட்சியங்களை அடைவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவர்களுக்கான வீரவணக்கம்!!!!!

எம் மக்கள் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது, எமது முன்னோர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டங்கள் ஆயுத வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்ட போது, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தமிழீழத்தை நிறுவும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டதில் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து ஒப்பற்ற தியாகங்களையும், உலகமே வியக்கும் வகையில் பல வெற்றிகளையும் நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்கள். எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாது தாயக…

ஐ.நா வில் தமிழர்களின் ஒருங்கிணைந்த காத்திரமான செயற்பாடுகளுக்கான அழைப்பு!

  ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN…

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் உலகத் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடர் கடந்த 13.09.2021 அன்று ஆரம்பமாகி 08.10.2021 திகதி வரை இடம்பெற்றது. தொடரும் தமிழின அழிப்பை மூடிமறைத்து, சிறீலங்கா அரசினை அனைத்து விசாரணைப் பொறிமுறைகளிலுமிருந்து தப்ப வைக்கவும், சிறீலங்கா அரசும், அதன் ஆதரவாளர்களும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் சூழலில் இக்கூட்டத்தொடரும் முக்கியமானதாக அமைந்தது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இணையவழி ஊடாக இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின்…

தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும்,ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஒன்றிணைந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள்!

தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த வரவேண்டுமென உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்! 1 46 679. இது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய வெறும் எண்ணிக்கையல்ல. ஈழத் தமிழரின் சரித்திர ஏட்டில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள். இந்தப் பெருநீள எண்ணிக்கையின் ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தமிழனின் உயிர். 2009 திட்டமிட்ட தமிழினவழிப்புப் போரின் இறுதித் தருவாயில் டிசம்பர் 2008லிருந்து மே 2009 வரை ஆகக் குறைந்து 146 679 பேருக்கு என்ன ஆனது என்று 12 வருடங்கள் கழிந்தும் இன்றும்…