தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும் (மே 18 – ஊடக அறிக்கை)!!!
தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும்!!! தமிழீழம் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு எதிராக தமிழீழ மக்கள் அரசியல் வழியில் தமது சனநாயக போராட்டங்களை நடத்திய போது அப்போராட்டங்களை சிறீலங்கா இனவழிப்பு அரசு ஆயுதம் கொண்டு அடக்கியது. நிராயுத பாணிகளாக நின்ற தமிழீழ மக்கள் தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிலிருந்து தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து சனநாயக வழிகளும் முற்றாக முடக்கப்பட்ட சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. ஓர்…






