ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!
தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கில் தமிழீழ இளையோர்களுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
குறிப்பாக மகுட நுண்ணுயிர் தொற்றுக் காலத்திலும் சிறீ லங்கா அரசின் திட்டமிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்பை எதிர் நோக்கும் தமிழீழ இளையோர்களின் இன்னல்களும் எடுத்துரைக்கப்படவுள்ளது.
அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி ஊடாக இடம்பெறும் இவ் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலி இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்.
https://us02web.zoom.us/j/87251575857?pwd=SVVlWlAvQk1jN0NGQm1PVzRTaWt4Zz09
Meeting ID : 872 5157 5857
Pass code : 060421
வெல்வது உறுதி!
தமிழர் இயக்கம்
The concept note of our side event will be include in a list that will be reflected in the website of the ECOSOC Youth Forum at:











