Uncategorized @ta

மகுட நுண்ணுயிர் ( Covid 19 ) தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடிப்படையாக கொண்டு மீள் கட்டமைப்பிற்கான பத்துவருட செயற்பாடுகள்

( A Decade of Action: Building a Resilient Recovery ) எனும் தொனிப்பொருளில் ஐ.நா சபையின் பொருண்மிய மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரிவின் (ECOSOC)10 வது இளையோர் மன்றம் ஏப்ரல் 6,7,8 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாக இடம்பெற்றது. ஏப்ரல் 6ம் திகதி ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 54 மாநாடுகள் பல்வேறு தலைப்புக்களில் இடம்பெற்றது. இதில் தமிழர் இயக்கத்தின் இணை அமைப்பான இளம் தமிழ் மாணவர்கள் (Jeunesse Etudiante Tamoule ) அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 6 செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தலைப்பில் இணையவழி மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது. இவ் இணையவழி மாநாட்டில் தமிழீழ இளையோர் உற்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

குறிப்பாக மகுட நுண்ணுயிர் தொற்றுக் காலத்திலும் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட கட்டமைப்புசார் தமிழின அழிப்பின் ஊடாக தமிழீழ இளையோர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பாகவும் கனடா, அமெரிக்கா,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழீழ இளையோர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழர் இயக்கத்தின் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணைப்பாளர் நிசா பீரிஸ் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 130 மேற்பட்டோர் பங்கெடுத்திருந்தனர். மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த இனப்பிரச்சினைகள் தொடர்பான ஆய்வாளர் கலாநிதி ரெட்குறோ தொரோ ( Dr.Redcrow Thoreau ) அவர்களும் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டிருந்தார். அத்துடன் இவ் இளையோர் மன்றத்தில் அரசசார்பற்ற அமைப்புக்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்ற 54 மாநாடுகளில் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாடாக இது காணப்படுவதாக ஐ. நா சபையின் பொருண்மிய மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரிவினர் (ECOSOC) தெரிவித்தார்கள்.

அந்தவகையில் இளம் தமிழ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் அமிர்தினி அன்ரனி அவர்களின் வரவேற்புரையுடனும், பிரான்சில் வாழும் இளம் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களான அர்த்தனா பிரபாகரன், பிரியங்கா மித்திரன் ஆகியோரின் வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய இம் மாநட்டில் பல்வேறு தேசங்களில் இருந்தும் கலந்துகொண்ட இளையோர்கள் பின்வரும் தலைப்புக்களில் தமது உரைகளை வழங்கியிருந்தார்கள்

– இலங்கையில் சமாதானம் வருமா? : கீர்த்திகா லோகநாதன், கனடா. – இளையோர்களின் அடையாளப் போராட்டம் : கபீர் குர்பன், உய்குர். – கோவிட் 19 தொற்று காலத்தில் மனித உரிமைகள் : மொனிகா மித்தரிச், மொந்தே நேக்ரோ. – கோவிட் 19 அதிர்வலைகளும் அதன் தடுப்பு நடவடிக்கைகளில் இளையோர்களின் பங்களிப்பும் : லியன்சா லவண், அமெரிக்கா. – கடந்த பல இனவழிப்பு மற்றும் வெகுசன அட்டூழியங்களிலிருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டியவை : நசனிம் சபாரி, ஈரான். – இரக்கமற்ற பாலச்சந்திரன் படுகொலை : பிரியங்கா யோகராயா, பிரான்ஸ். – பெண்கள் இல்லாது சமாதானம் இல்லை : எர்நெஸ்ட் எக்கியே, கமுரூன். – ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் 16வது இலக்கு சமாதானம், நீதி மற்றும் காத்திரமான நிறுவனங்கள் : சுபத்ரா வரதராச், தமிழ் நாடு. – கறுப்பினப் பெண்கள் எதிர்கொள்ளும் இனப்பாகுபாடு : மெதாலின் பல்மா வில்லா, பெரு. – ஆபிரிக்கர் மேல் காட்டப்படும் இனப்பாகுபாடு : யனேப் முத்தாங்க் தபோங்கோ, கமுரூன். – இனவழிப்பும் அதன் வடிவங்களும் : பிரவீணா ரவீந்திரன், கனடா. – தமிழின அழிப்பே எனது தலையெழுத்தா? : திலக்சி சிவகணேசன், கனடா. – துத்சி மக்களில் பாலியல் வல்லுறவுகளால் பிறக்கும் குழந்தைகள் : விவியான் கிர்வா, ருவான்தா. – ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் கல்வித்திட்டம் : அஞ்சலி சிறிதரன், பிரான்ஸ். – கட்டாயத்திருமணங்கள் : எதாப் கிங்சிலி, கொங்கோ – ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தலைவிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் : அர்த்தனா பிரபாகரன், பிரான்ஸ். – ஈழத் தமிழின அழிப்பைத் தடுக்க என்ன செய்யவேண்டும் ? : அமரன் கந்தையா, அமெரிக்கா

மறுமொழி இடவும்

Your email address will not be published. Required fields are marked *

Post comment