ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடர் 18.06.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு 06.07.2018 வரை நடைபெற்றது.கடந்த 18.06.2018 அன்று மனித உரிமை ஆணையாளரால் உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகளின் தற்போதைய மனித உரிமை நிலைப்பாடுகள் சார்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சிரியா, மியன்மார், வெனிசுவெலா உள்ளிட்ட 22 நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.











