Priyanka Yogarajah|Association Thendral|GD item 4|46th Session of the UNHRC
நீதிக்காகப் போராடுகிறவர்கள் தொடர்ந்தும் மிரட்டப்படுகிறார்கள்!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில்
தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்ஸ் வாழ் இளம் தமிழ் மாணவி யோகராசா பிரியங்கா அவர்கள்,
போர் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்தும் மனித உரிமையின் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. சில மாற்றங்கள் தொடர்ந்து அழிவுப்பாதையில் நடக்கின்றன.1, 46, 000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள அரசு நடத்திய இன அழிப்பு போரில் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவம் தமிழ் அரசியல் கட்சிகளையும், குடிமைச்சமூகங்களையும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையும், சமயப் பகுதிகளையும், இனவழிப்பு போர் நடந்தபொழுது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகளை தடுத்தல் போன்றவற்றை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றது.
1600 நாட்களுக்குமேல் காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் தங்களது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீதிக்காக போராடுகின்றவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் மிரட்டப்படுகின்றனர். சிங்கள அரசு மனிதஉரிமை பேரவையில் கொண்டுவந்த தீர்மானங்களை செயல்படுத்த ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு எதையும் செயல்படுத்தவில்லை. அதனால் பொறுப்புக் கூறுவதற்கும் நீதிக்கும், ஒப்புறவுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
சிறீலங்காமீது தீர்மானத்தைக் கொண்டு வரும் முக்கிய குழுவும் மானிட உரிமைகளின் பேரவையின் உறுப்பினர்களும் தமிழர்கள் முன்வைக்கும் சட்டப்பூர்வமான வேண்டுகோளையும் தமிழர்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப்பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பாதுகாப்பு பேரவையின் வழியாக சிறீலங்காவை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறுத்தவேண்டும். நான்காவது திட்ட வரைவுக்குகீழ் புதிய தீர்மானத்தை கொண்டு வந்து இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டும். தமிழர்கள் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என தனது உரையில் எடுத்துரைத்தார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india









