அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழினப்படுகொலையால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் மனிதவுரிமை பாதுகாவலராக திகழ்ந்த இவரின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது.
132 ECOSOC அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப்பிற்கு இரங்கல் செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழர் இயக்கமும் ஆண்டகை இராயப்பு ஜோசப்பின் குடும்பத்தாருக்கும், அனைத்து தமிழர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துலக சட்டத்தை மதித்து அவைகள் இலங்கையிலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், மனிதவுரிமைகளின் உலகளாவியத் தன்மை, சமநிலமை மற்றும் பாதிக்கப்பட்வர் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றையும் நமக்கு நினைவூட்டி ஈழத்தமிழர்களிடமும் மற்றும் சர்வதேச சமூகத்தினரிடமும்; அவர் எப்போதும் தமிழினவழிப்பின் நீதி கோரி ஒரு வலுவான குரலாக இருந்து வந்திருக்கின்றார்.
மிகவும் எளிமையாக சொல்லப்போனால், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் நம்மில் ஒருவராக இருந்து, இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலையில் தப்பியவர்களுக்கு எப்போதும் தைரியமான உறுதியான குரலாக இருந்து வந்திருக்கிறார்.
அச்சம் இல்லாமல் எவரினது தயவும் இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியோடு இங்கும் அங்குமுள்ள அனைவரின் சார்பாக பேசும் ஒரு வலுவான எடுத்துரையாளராக அவர் இருந்திருக்கின்றார்.
கத்தோலிக்கரின் மிக முக்கியமான மனித உரிமை பாதுகாவலராக மட்டுமல்லாது அவரது தலைமையில் தமிழ் மனிதவுரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழினப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் ஆகியோரின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பிற்கு இவ்வாறு அவர் பங்களித்தருக்கின்றார். மேலும் அவரது கடைசி மூச்சு வரை உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் மேற்கொண்ட மனிதாபிமான சேவைகள் போற்றத்தக்கன.
அவரது பணிகள் பெரும்பாலும் கடினமாக இருந்தபோதிலும், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் தனது பதவிக்காலம் முழுவதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளையும், தமிழ் உரிமை பாதுகாவலர்களின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளையும், மற்றும் சிவில் சமுதாயத்தின் பங்களிப்பையும் உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலும் வலுவூட்ட அடிப்படை அடித்தளமாக செயல்பட்டுள்ளார்;.
சுயாதீன நிபுணர்கள் மற்றும் சர்வதேச புத்திஜீவிகளுடன் இணைந்து உண்மையைக் கண்டறியும் பணியை அவர் வழிநடத்தினார். யுத்த வலயத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்த மக்கள் தொகை தொடர்பான மாவட்ட அளவிலான இலங்கை அரசு துறைகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவர தகவல்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து, அதன் அடிப்டையில் 146 679 நபர்கள் கணக்கில் தவறப்பட்டிருக்கின்றார்கள் என எடுத்துக்காட்டியிருந்தார்.
சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் மிரட்டல்களையும்; அச்சுறுத்தல்களையும் தாண்டி தனது உயிருக்கஞ்சாது அவர் அந்த எண்ணிக்கையை டுடுசுஊ ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தார்.
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எப்போதும் இடித்துரைத்து வந்தார்.
“ஈழத்தமிழர்கள் உங்களை எப்போதும் மறவோம், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியானீர்கள். சர்வவல்லவரின் தூதரே! இரக்கம், சுயநிர்ணய உரிமை, தன்னலமற்ற தன்மை, சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் முக்கியத்துவங்களை எங்களுக்கு உணர்த்தினீர். எங்கள் இனம், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி, எம்மை எவ்வாறு பிறர் மதிக்க வேண்டுமென நாம் நினைக்கின்றோமோ அது போல் நாமும்; மற்றவரை மதிக்க வேண்டுமென எமக்கு கற்பித்தீர். தாழ்ச்சியின் சிகரமான நீர் எங்களை பெருமைப்படுத்தினீர். எங்கள் பணிகள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் எங்களை உலகம் அறியும்படி செய்தீர். சமயத் தலைவர் பலர் இருப்பினும், நீங்கள்தான் … தமிழரின் விடிவெள்ளியாக நீங்களே தான் … இந்த உலகத்தை ஒன்று திரட்டி ஈழத்தமிழர்களுக்காக ஓர் தேசத்தை கட்டியெழுப்ப பாடுபட்டீர்கள்.”
விடை பெறுங்கள் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! உங்கள் ஆன்மா எங்கள் இதயத்திலும்; உணர்விலும் உள்ளது. La lutte continue !!!
உத்தியோகபூர்வ அறிக்கைகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)









