Thuraippah Rukshaan|Le Pont|GD item 4|46th Session of the UNHRC
தமிழர் தாயகத்தில் தொடரும் சிறீலங்காவின் காலணித்துவம்!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில் பாலம் ( Le Pont ) அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்சு வாழ் இளம் தமிழ் மாணவன் துரையப்பா ருக்சன் அவர்கள்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு தமிழர்ளுக்கு ஓர் இராணுவ வீரர், வடக்கு மாகாணத்தில் ஆறு தமிழர்களுக்கு ஓர் இராணுவ வீரர் என்ற அளவில் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள இராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக ஒதுக்குவதாலும் வனத்துறைக்கும், பௌத்த வழிபாட்டுதலங்களுக்கும், தொல்லியல்துறைக்கும் ஒதுக்குவதாலும், தங்களது வெற்றியின் நினைவிடங்களுக்கும், பௌத்த கோவில்களுக்கும், சிங்கள காலனிகளை உருவாக்குவதற்கும் தமிழர்களின் நிலங்களை ஒதுக்குவதாலும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்து அழிப்பதுதான் அரசின் தெளிவான திட்டமாகும்.
முக்கிய குழுவால் இலங்கையைக் குறித்து முன்வைத்த அறிக்கை மானிட உரிமை உயர் ஆணையரால் முன்வைக்கப்பட்ட மீளாய்வை கண்டுகொள்ளவில்லை. அவர் சிறீலங்கா அரசு நீதியை நிலைநிறுத்த, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தினார். எதிர் காலத்தில் வரும் முரண்பாடுகளை தடுக்க பன்னாட்டு சமுகத்தின் ஈடுபாடு தேவை என்று வலியுறுத்தினார். நிரந்தர அமைதியும் நீதியும் பொறுப்புக் கூறலும் உறுதிபடுத்த தெளிவான அணுமுறையை விவரிப்பதாக இல்லை. ஐநாவின் புலமைமிக்க குழுவின் எல்லா உறுப்பினர்களும், 9 பழைய சிறப்பு ஆய்வாளர்களும், நான்கு பழைய உயர் ஆணையர்களும் இன்றைய ஐநா மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரும் முன்வைக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்தவேண்டும்.
இலங்கையின்மீது இந்தப் பேரவை கொண்டு வரும் தீர்மானம் தமிழ் மக்களை காலனியாக்குவதையும் அவர்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும். அதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுமயமாக்கலை நிறுத்தவேண்டும். பன்னாட்டு மனித உரிமை குழுவால் நம்பிக்கையும் சூழலையும் உருவாக்கவேண்டும்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india










