46th Session of the Human Rights Council|GD item 3|Tamil Uzhagam|Mme.Kumuthini Kunaratnam
சிறீலங்கா இராணுவத்தினால் தொடர்ந்து பாதிக்கப்படும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா வில் எடுத்துரைப்பு!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் ( Tamil Uzhakam ) சார்பாக உரையாற்றிய திருமதி குமுதினி குணரட்னம் அவர்கள் தனது உரையில்,
சிறீலங்கா அரசும் அதன் அமைப்புகளும் தமிழர்கள் மீது இன அழிப்பு நடத்தியதென்றும், தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றதென்றும் மனித உரிமை உயர் ஆணையரும் 10 சிறப்புபொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 12 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 1600 நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களும் உறவுகளும் தங்களது உறவுகளுக்கு என்ன ஆனதென இதுவரை ஒரு பதிலும் வரவில்லை. இந்த உறவுகளும் தாய்மார்களும் தொடர்ந்து இராணுவ, காவல்துறையின் கடுமையான நெருக்கடியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளும், ECOSOC அனுமதித்த 116 அமைப்புகளும் சேர்த்து 39 நாடுகளிலிருந்து 3200 நிறுவனங்கள் பிரான்சு தமிழ்ப்பண்பாட்டு பாரதி இயக்ககத்தின் பெயரில் இரண்டு அறிக்கைகளை A/HRC/40/NGO/218 மற்றும் A/HRC/40/NGO/248 கீழ் கொடுத்தனர்.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்தவும் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவும் ஐ.நாவின் மனித உரிமை பேரவையிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்த மனித உரிமை பேரவை தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை பாதுகாக்கவும் தமிழர்கள் இராணுவமயமாக்கலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் இழிவான குற்றங்களும், பாரம்பரிய, பண்பாட்டு. அமைப்புசார்ந்த இனஅழிப்பும் நிறுத்த இரண்டு மடங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையைப்பற்றி உரையாட சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தவேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india









