Lavan Muthu|Association Bharathi CCFT|GD item 4|46th Session of the UNHRC
ஐ.நா வில் எடுத்துரைக்கப்பட்ட தியாகி திலீபனின் ஈகம்!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில் பாரதி பிரெஞ்சு தமிழ்ப் பண்பாட்டு அமைப்பின் (Association Bharathi Centre Culturel Franco-Tamoul) சார்பாக உரையாற்றிய அமெரிக்கா வாழ் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் லவன் முத்து அவர்கள்,
பல தசாப்தங்களாக ஈழத்தமிழர்கள் அடக்கியாளும் சர்வாதிகார சிங்கள அரசுக்குகீழ் போராடிக் கொண்டிருக்கின்றனர். 1987 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் 5 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு கடிதத்தை இந்திய ஒன்றிய அரசிடம் கொடுத்தது. அவை பின்வருமாறு: சிங்கள காலணியாக்கத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். முகாமிலும் சிறையிலும் சிங்கள இராணுவத்தாலும் காவல்துறையினராலும் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும். நெருக்கடி விதிமுறைகளை அகற்றவேண்டும். சிறீலங்கா அரசு உருவாக்கிய ஊர் காவல்படையிருக்கு கொடுக்கப்படும் ஆயுதங்களை நிறுத்தவும். தமிழர் பகுதிகளில் சிங்கள காவல்துறையை உருவாக்குவதை நிறுத்தவும்.
இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஓர் உரையை 23 அகவை நிறைந்த இளைஞன் நிகழ்த்தி, உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். அதில் பலர் கலந்துகொண்டனர். 12 நாட்களாக நீரைக்கூட அருந்த மறுத்து செப்டம்பர் 26 நாள் தியாகச் சுடர் திலீபன் உயிர் நீத்தார். அவருக்கு ஈகியர் அடக்கச் சடங்கு யாழ்ப்பாணத்தில் கொடுக்கப்பட்டது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இலண்டனில் உண்மை நீதிக்காக பிப்ரவரி 27 ஆம் நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னாள் இங்கிலாந்து அரசுப்பணியாளர், இன்று மனித உரிமை போராளி திருமிகு அம்பிகை செல்வக்குமார் தொடங்கியிருக்கிறார்.
உடனடியாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை ஈழத்தமிழர்களின் சார்பாக முன்வைத்த நான்கு கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india










