Logan Kanapathi|Tourner La Page|GD item 4|46th Session of the UNHRC
காத்திரமான பன்னாட்டு விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர்கள்!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில்
பக்கத்தை திருப்பு அமைப்பு (Tourner La Page) சார்பாக உரையாற்றிய கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள்,
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையும் எல்லா நாடுகளில், குறிப்பாக இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் பதிவுசெய்து அறிக்கை தந்த ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்தையும் அதன் உறுப்பினர்களையும் வரவேற்கின்றேன். ஆனால் அவை ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுக்கிறது. உயர் ஆணையர் அலுவலகமும் இந்தப் பேரவை பிறகு தந்த தீர்மானங்களும் தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பை ஏற்க மறுக்கின்றன.
2009 ல் நடைபெற்ற கடைசிக்கட்ட போரில் சிறீலங்கா இராணுவம் தமிழர்களின் எதிர்ப்பை அடக்கியது. குறுகிய காலத்தில் 1, 47, 000 க்கு மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தது. 80 மில்லியன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வடக்கு மாகாண அவையும், இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றமும் இனஅழிப்பையும் எல்லா குற்றங்களையும் கண்டுபிடிக்க ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். தமிழர்களின் கூக்குரல் பொங்கு தமிழிலும், 1, 00, 000 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பொத்துவிலிருந்து பொலிக்கண்டி வரை நடந்த ஊர்வலத்திலும் கேட்கப்பட்டது. சிறீலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும், சிறப்பு ஆய்வாளரை இலங்கைக்கு நியமித்து உண்மையில் நடந்த, நடக்கும் இனஅழிப்பை ஆய்வுசெய்து உலகிற்கு அறிவிக்கவேண்டும் என தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india









