Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. 12.02.2019 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகிய இவ் வழக்கு, ஒரு மாத காலத்திற்கு இடம்பெறவுள்ளது. அவ் வகையில் இந் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பு கண்காணிப்பாளர்களாக சர்வதேச ரீதியாக, சுயாதீன துறைசார் நிபுணர்களிற்கு கத்தலோனிய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கேற்ப கத்தலோனிய அரசால், தமிழர் இயக்கத்திற்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப, தமிழர் இயக்கத்தின் ஆலோசகரும், நாம் தமிழர் கட்சியின் ஐ.நா மன்ற குழுத் தலைவருமான முனைவர் போல் நியூமன் அவர்கள் கடந்த 18.02.19 தொடக்கம் 22.02.19 வரை இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தார்.
இச் சந்தர்ப்பத்தில், முனைவர் போல் நியூமன் அவர்கள் கத்தலோனியா அரசின் பிரதிநிதிகளுடன், ஈழத் தமிழர் விடயம் சார்ந்து பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.அவ் வேளையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு, ஈழத் தமிழர் இறையாண்மை நிறுவதற்கான எமது பயணத்தில் கத்தலோனிய அரசு தமது முழு ஒத்துழைப்பை வழங்குமெனெ உறுதி அளித்திருந்தனர்.
தமிழர் இயக்கமானது கடந்த பல வருடங்களாக கத்தலோனியா அரசுடன் பல்வேறுபட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், தமது இறையாண்மைக்காக போராடும் உலகின் பல்லின மக்களுடனும் ஒன்றிணைந்து ஐ.நா சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செயற்பட்டுவருகின்றது.
இதன் விளைவாகவே கத்தலோனிய அரசினாலும்,பார்சிலோனா மாநகரசபையினாலும் ஈழத் தமிழர் விடயம் சார்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
21.02.2019 – Madrid Trial – ஊடக அறிக்கை










