“இலங்கை அரசாங்கம் எமக்கு ஒரு போதும் விடிவைத் தரப்போவதில்லை. ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இலங்கை விடயத்தில் ஏமாற்றப்படப்போகின்றார்கள். இது வெறுமனே கால நீடிப்பு நாடகமாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஐ.நா. வை மட்டும் சாட முடியாது” எனக் கூறுகின்றார் தமிழர் இயக்கத்தின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இணைப்பாளர் நிஷா பீரஸ்.
ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நாளை – புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்தப் பின்னணியில் தற்போதைய கூட்டத் தொடர் மற்றும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்கான உபாயங்கள் குறித்து ‘தினக்குரல்‘ இணையத்துக்கு பிரத்தியேகமாக நிஷா பீரிஸ் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.
0 ஆணையாளரின் ஆரம்ப உரை, இணைத் தலைமைகளின் அறிக்கை என்பன தமிழர்களுக்கு சாதகமானதா?
0 இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதா?
0 மனித உரிமைகள் பேரவையின் மூலமாக தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியுமா?
0 மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் செயற்படுவதன் மூலம் எதனைச் சாதிக்க முடிந்திருக்கின்றது?
0 மார்ச் அமர்வுகளை இலக்காக வைத்த உபாயம் என்ன? அதற்கான செயற்திட்டங்கள் என்ன?
போன்ற விடயங்கள் குறித்து நிஷா பீரிஸ் இந்தக் காணொளி நேர்காணலில் பேசுகின்றார்.










