46th Session of the Human Rights Council|GD item 3|Ass.Culturelle Tamouls an France|Mr.kandiah P
சிறீலங்கா அரசால் வடக்கு, கிழக்கில் இராணுமயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிக்கிறதா ஐ.நா வில் கேள்வி எழுப்பிய தமிழர் பிரதிநிதி!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கியஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் பிரான்ஸ் தமிழர் பண்பாட்டு அமைப்பின் சார்பாக ( Association Culturelle des tamoules en France ) உரையாற்றிய திருமிகு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தனது உரையில்,
தமிழ் மக்களுக்கு நடந்த பல்வேறு வகையான இனவழிப்புகளை ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரும் சிறப்பு பொறிமுறை பெற்றுள்ள 10 நபர்களும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஈராக்கிற்கு பிறகு அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் உள்ள நாடு இலங்கையாகும். 1980 களிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு முடிவும் வரவில்லை. சிறீலங்கா அரசால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுமயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிப்பதாக தெரிகிறது.
2008 முதல் மே 2009 வரை நடைபெற்ற இறுதி ஆறு அல்லது ஏழு மாதகால இன அழிப்பு போரில் வன்னியில் மட்டும் 1, 46, 679 இற்கு மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என கணக்கில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. சிறீலங்கா இராணுவம் நிறுவனப்படுத்தப்பட்ட கொடுமைபடுத்தும் முகாம்களும், இராணுவ முகாம்களுக்கு அருகில் கொலைக்களமும் உள்ளன. சிறீலங்கா அரசு தமிழ் தேசியத்தையும், இறையாண்மையையும், தன்நிர்ணய உரிமையையும் மறுக்கிறது. தீர்மானம் கொண்டுவர உதவிய உறுப்பு நாடுகளிடம் கீழ்கண்ட தீர்மானத்தை கொண்டுவர கேட்டுக்கொள்கிறோம்: விரைவாக இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை உருவாக்கவேண்டும். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டுசேர்க்கவேண்டும். 4 வது திட்ட வரைவுக்குகீழ் சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும். வடக்கு, கிழக்கு மகாணங்களை காலனியாக்குவதை நிறுத்தி, இராணுவமயமாக்கலை தடுத்து நிறுத்தவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india






