46th Session of the Human Rights Council|GD item 3|SDCE|Mr.Sritharan Sivagnanam
இன அழிப்பு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும்தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள்கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் SDCE அமைப்பு சார்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. சிவஞானம் சிறிதரன் அவர்கள் தனது உரையில்,
சிங்கள அரசால் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர் என்று ஐநாவின் மானிட உரிமைப் பேரவையின் உயர் ஆணையரும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவித்தார். ஆனால் அவர்கள் தமிழர்கள் அமைப்புசார்ந்த இனவழிப்பால் பாதிக்கப்பட்டனர் என்று கூறுவதற்கு மறந்துவிட்டனர் என்று சுட்டிக்காட்டினார்.இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இன அழிப்புசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது. தமிழர்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இராணுவ அடக்குமுறைக்கு கீழ் தங்களது பண்பாட்டு, சமூக, பொருளாதார, அரசியல், குடிமை உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். கீழ்காணும் பரிந்துரைகளை வைத்து இலங்கைமீது தீர்மானம் கொண்டுவரும் முக்கிய குழுவும் மனித உரிமை உறுப்பினர்களும் உறுதியான தீர்மானத்தை கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்: இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை பொறிமுறை நடத்தவேண்டும். இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும். தமிழர்களின் தன்நிர்ணய உரிமையையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதிசெய்ய ஐநாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india






