Rathika Sitsabaiesan|Jeunesse Etudiante Tamoule|GD item 4|46th Session of UNHRC
தமிழின அழிப்பை ஆராய்வதில் ஐ.நா தோல்வி அடைந்ததால் அது இன்றும் தொடர்கிறது!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில்
இளம் தமிழ் மாணவர்கள் (Jeunesse Etudiante Tamoule) அமைப்பின் சார்பாக உரையாற்றிய முன்னை நாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் அவர்கள்,
1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையை ஆட்சிசெய்த பல்வேறு அரசுகள் திட்டமிட்டு தமிழர்கள்மீது ஓர் இன அழிப்பை நடத்தினர். உலக நாடுகளிலிருந்து வளர்ச்சித் திட்ட உதவிகளைப் பெற்று, தமிழர்களின் அடையாளத்தை அந்த மண்ணில் அழித்தும் தமிழர்களின் வரலாற்று மரபு இடங்களை சிங்கள பௌத்த இடங்களாக மாற்றுகின்றனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வழியாக தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பை ஐ.நா ஆராய்வதில் தோல்வி அடைந்ததால் இன்றும் தொடர்ந்து இனஅழிப்பு நடக்கிறது.
தமிழர்களது நிலம் சிறீலங்கா இராணுவத்தினால் காலனியாக்குவது இன்றைய உண்மை நிகழ்வாக இருக்கிறது. கடந்த வருடம் தமிழ் மண்ணிலிருந்து 1,00,000 தமிழ் இளைஞர்களைப்பற்றிய தரவுகளை எடுத்து, வேலைவாய்ப்பு தருவதாக சிறீலங்கா அரசு நாடகமாடியது.
வட்டுக்கோட்டை தீர்மானம், சுதுமலை, பொங்கு தமிழ், எழுக தமிழ், சில நாட்களுக்கு முன்னாள் பி2பி(பொத்துவில் – புலிகண்டி எழுச்சி) போன்ற பல்வேறு எழுச்சிக் கூட்டங்கள் வடக்கு, கிழக்கு மகாணங்களில் நடந்தன. 400 கல்தொலைவு நடைபெற்ற ஊர்வலத்தில்1,00,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சிறீலங்கா அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றதில் நிறுத்து என்றும், இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டுமென்றும், சிரியாவில் அமைத்ததுபோல சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான பொறிமுறையை அமைக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைத்ததுடன்,வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் பாரம்பரிய இன அழிப்பு செயல்களை உற்றுநோக்க சிறப்புச் சட்டத்தை ஐநா மனித உரிமை பேரவை கொண்டுவரவேண்டும் என்று தனது உரையில் கோரிக்கை வைத்தார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india










