20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இவ் ஒன்றுகூடல் ஆரம்பமானது.
தமிழர்களின் உயர்வான மரபுகளின்படி மாவீர்ர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடரந்து நிகழ்வுக்கான மங்களவிளக்கேற்றப்பட்டு அகவணக்கத்துடன் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தலைமையுரை,வரவேற்புரை என்வவற்றை தொடர்ந்து தமிழர் இயக்கத்தின் உருவாக்கம்,தமிழர்கள்,தமிழீழம்,இன்று தமிழ்தேசியம் எதிர்நோக்கும் சவால்கள்,power Point Präsentation,ஆகிய தலைப்புக்களில் காணொளிகளின் உதவியுடன் தெளிவூட்டல்களும் விளக்கங்களும் வெளிப்படையாக இடம்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக நிகழ்வில் கலந்து கொண்டோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒருங்கிணைந்து ஓர். SWOT Analysis நடாத்தப்பட்டு கருத்தாராய்வும் ,விவாதமும் மிக ஈடுபாட்டுடன் நான்கு குழுக்களாக பிரிந்து தமிழர்களாகிய நாம் எமது விடுதலைக்கான இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர் நோக்கும் பலம்,பலவீனம்,வாய்ப்புக்கள்,அச்சுறுத்தல்கள் என்ற தலைப்புக்களில் விவாதிக்கப்பட்டது, மேலும இவ் உன்னதமான பாதையில் “தமிழர் இயக்கத்தில்” தனி நபர்களாகவும்,அமைப்புக்கள் நிறுவனங்கள் கூட்டாக அமைப்புக்களாகவும் நிறுவனங்களாகவும் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் ஈழத்தமிழ்மக்கள் சனநாயகரீதியில் வழங்கிய ஏகோபித்த மக்கள் ஆணையை ஏற்றுக்கொள்வதன் ஊடாக இணைந்து ஒன்றுபட்டு பயணிக்கலாம் என்ற அழைப்பு பகிரங்கமாக விடப்பட்டதுடன் தமிழீழ விடுதலைக்கான பணியே எமது முதன்மையான பணி என்ற உறுதிப்பாடும் எடுக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் தமிழர் இயக்கத்தின் வேலைத்திட்டம் அறிவிக்கப்பட்டதுடன் அதற்கான முழுமையான ஆதரவு கோரப்பட்டு. இலக்கை நோக்கிய பயணத்தில் உறுதி எடுக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.










