46th session of the Human Rights Council|GD item 2|Action of Human Movement|Mme Nisanthi PEIRIS
ஐ.நா வில் சுட்டிக்காட்டப்பட்ட பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம்!!!!
ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உல்களாவிய ரீதியிலும் சுவிற்சர்லாந்திலும் விதிக்கப்பட்டுள்ள பாரிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிகமாக இணையவழி ஊடாகவே இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்கின்றனர்.
இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் இணையவழி ஊடாக இணைந்து கொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் 01/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 2 – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை (Item 2 – Annual report of the United Nations High Commissioner for Human Rights) தொடர்பான பொது விவாதத்தில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மூன்று உரைகளைப் பதிவுசெய்திருந்தனர்
மனித இயக்கத்தின் செயல் (AHM) என்ற அமைப்பின் சார்பில் உரையாற்றிய திருமிகு நிசாந்தி பீரிசு அவர்கள்,
12 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கு உலக நீதி பொறிமுறையை ஈழத்தமிழர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எட்டு மாதங்களுக்குள் 1, 47, 000 க்குமேல் கொல்லப்பட்டவர்களை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர். இன அழிப்பு நடத்தியவர்களை போர் கதாநாயகர்களாக சித்தரிப்பதில் எல்லா சிங்கள ஆட்சியாளர்கள்(ராயபக்சே, ரணில், சிறிசேனா) ஒன்றாக உள்ளனர். அதுபோல 2015 முதல் உலக சமூகம் அமைதிகாக்கிறது. 2015 ஆம் ஆண்டு உயர் ஆணையர் பொறுப்பு கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறையைவிட பன்னாட்டு பொறிமுறை தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணமும், அண்மையில் நடைபெற்ற பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணமும் சுதந்திரமான உலக விசாரணையையும் உலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்துவதையும் தீர்மானங்களாக முன்வைத்ததுடன், தன்னாட்சி உரிமை, சிறப்பு ஆய்வாளர் நியமித்தல் ஆகியவற்றையும் வலியுறுத்தியிருந்தனர்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india










