46th Session of the Human Rights Council|GD item 3|Association Bharathi CCFT|Ms.Ambihai Seevaratnam
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் கோரிக்கைகளை ஐ.நா வில் எடுத்துரைத்த அம்பிகை செல்வகுமார்!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய
ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும்த மிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின்அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இம்முறை இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் பாரதி அமைப்பின் ( Association Bharathi Centre Culturel Franco Tamoul )சார்பாக ஈழத் தமிழர்களுக்கான நீதிவேண்டி நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பிக்கை செல்வக்குமார் அவர்கள் தனது உரையில்,
தமிழ் மக்களுக்கு நடந்த பல்வேறு வகையான இனஅழிப்புகளை ஐநா மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரும் சிறப்பு பொறிமுறை பெற்றுள்ள 10 நபர்களும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு தமிழர்கள்மீது நடந்துகொண்டிருந்த இனஅழிப்பை தடுத்து நிறுத்தவும், அவர்களை பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் உலக அமைப்புகளையும், ஐநாவையும் கெஞ்சினார்கள். ஆனால் செவிடர் காதில் சங்கு ஊதியதுபோல அமைதியாக இருந்தனர். நான்கு இலக்க தமிழ் மக்களை ஓரிடத்தில் அடைத்து, போரின் கடைசிக் கட்டத்தில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கொலைசெய்தனர். மருத்துவமனைகள், ஆயுத தாக்குதல் தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஆகியவற்றை நோக்கி திட்டமிட்டு குண்டுகளை வீசி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தனர்.
தமிழின அழிப்பை இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் தூண்டிவிட்டு, அதை நியாயப்படுத்தி வந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறந்தவெளி சிறைகளில் இனஅழிப்பு நடத்தும் சிறீலங்கா அரசைக் கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் சார்பாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளைக் பின்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்:
*பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்தவேண்டும். சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்தவேண்டும்.
*நிரந்தரமான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும்.
*இலங்கையில் ஐ.நா கள அலுவலகம் ஒன்றை அமைக்கவேண்டும்.
*ஐ.நாவின் தலைமையில் தமிழர்களுக்காக வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளேன் என தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india











