ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள், அதன் பின்னர் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இதனை உணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும்” எனக் கூறுகின்றார் ஜெனீவாவில் செயற்படும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத போதிலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது உரை, இலங்கை குறித்த பிரதான நாடுகளின் அறிக்கை என்பன இலங்கை விவகாரத்தை பேசுபொருளாக்கியுள்ளன.
இந்தப் பின்னணியில் ஜெனீவாவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ, பேராசிரியர் அருட்தந்தை குழந்தைசாமி ஆகியோருடன் காணலாம். அவர்களுடைய நேர்காணலை காணொளியில் காணலாம்;




