“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று ஜெனீவாவில் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மூன்றாவது வாரத்தில் கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 4 – ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் ( Item 4 – Human rights situations that require the Council’s attention – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் குழும ஆற்றல்படுத்துவதற்கான, வளர்ச்சிக்கான அமைப்பு சார்பாக உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை உரையாற்றிய போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அவரது உரையின் விபரம் வருமாறு;




