சுவிஸில் அனைத்துலக தமிழர் பேரவை – தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமனுடன் மக்கள் சந்திப்பு.
சென்னை உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நேற்று சட்டரீதியான மற்றும் மனித உரிமைத் தளத்திலே ஆற்றவேண்டிய செயற்பாடுகள் குறித்து அனைத்துலக தமிழர் பேரவை-தமிழர் இயக்கப் பிரதிநிதிகளுடனும், தமிழ் மக்களுடனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இன்றைய உலக ஒழுங்கிலே ஈழத் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சட்டவழிமுறையில் எவ்வாறு பணியாற்றுவது, இவ்விடயத்தில் தாய்தமிழகமும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் உறவுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் அவசியம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
சந்திப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணகுமார் அவர்களும், தமிழீழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.
ஊடகப்பிரிவு
தமிழர் இயக்கம்










