46th Session of the Human Rights Council|GD item 3|Tourner LA Page|Ms.Kethika Logan
ஐ.நா வில் வெளிப்படுத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக நினைவுத்தீவு இடித்தழிப்பு விவகாரம்!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய
ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் பக்கத்தை திருப்பு ( Association Tourner La Page ) சார்பாக உரையாற்றிய கீர்த்திகா லோகநாதன் அவர்கள் தனது உரையில்,
கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை உயர் ஆணையரும் சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தந்த அறிக்கையை வைத்து குறைந்தபட்ச தீர்மானத்தை இந்தப் பேரவை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சிறீலங்கா அரசு தொடர்ந்து தமிழ் மக்களுடைய கல்லறைகளையும் நினைவிடங்களையும் அழித்து வருகிறது. 12 ஆண்டுகளாக சிறீலங்கா இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட தங்களது சொந்தங்களை அவர்களது நினைவு நாட்களில் நினைவுகூருவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு சனவரி 8 நாள் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றிய செயல் சிறீலங்கா அரசால் நடத்திய இன அழிப்பை மூடிமறைக்க செய்யப்பட்ட செயலாகும்.
ஈழமண்ணில் தமிழர்களை அழிப்பது சிறீலங்கா அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. அதனால் சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுக் கூருவதை தடைசெய்கின்றனர். தமிழர்கள் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைக்க எவ்வித அரசியல் தளமுமில்லை. காவல்துறையினர் நீதிபதிகள் தரும் இடைக்கால தடை உத்தரவை பயன்படுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டங்களைத் தடைசெய்தனர். அதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிகண்டியிலிருந்து பொதுவில்லிற்கு சென்ற நடைபயண போராட்டத்தை தடைசெய்ய முயற்சித்தனர்.
பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை இலங்கையில் ஐநா மனித உரிமை பேரவை உருவாக்கவேண்டும். சிறப்பு நடைமுறை அதிகாரமுள்ளவர்களோடு இணைந்து சிறப்பு ஆய்வாளர் செயல்பட்டு இலங்கையில் நடக்கும் மனித உரிமைமீறல்களை கவனித்து உலகிற்கு அறிவிக்கவேண்டும். அதுபோல இலங்கை நாட்டிற்கான சிறப்பு ஆய்வாளரை நியமித்து, இலங்கையை நன்கு கவனித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india










