Nisanthi Peiris|Action of Human Movement|GD item 4|46th Session of the UNHRC
ஐ.நா வில் சுட்டிக்காட்டப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதிகோரிய தீர்மானங்கள்!
இணையவழி ஊடாக இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி குரல் கொடுத்து வரும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 15/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 4 – மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைச் சூழ்நிலைகள் (ITEM 4: HUMAN RIGHTS SITUATIONS THAT REQUIRE THE COUNCIL’S ATTENTION – GENERAL DEBATE) தொடர்பான பொதுவிவாதத்தில் மானிட இயக்கத்தின் செயல் ( Action Of Human Movement ) அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரான்சு வாழ் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் நிசாந்தி பீரிசு அவர்கள்,
இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், இலங்கை மாகாண அவைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் 18 எக்கோசோக் தொண்டு நிறுவனங்களும் உலகின் பலநாடுகளிலிருந்து 3200 தொண்டு நிறுவனங்களும் இந்த அறிக்கையை கொடுத்தன.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடைபெற்றது என்றும் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவந்தனர். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி. விக்னேசுவரன் தலைமையில் தமிழ் மக்கள்மீது 1948 ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசு இன அழிப்பு நடத்தி வருகின்றதென தீர்மானத்தை தயாரித்து உறுப்பினர்கள் அனைவரும் ஏற்று நிறைவேற்றினர்.
பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக ஐநா மனித உரிமை உயர் ஆணையமும், அதோடு தொடர்புடைய அமைப்புகளும் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 நாள் வடக்கு மகாணம் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்நாட்டு விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லையென்று பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறீலங்காவை நிறுத்த வழிகாட்டவேண்டும். திட்ட வரைவு 4க்குகீழ் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமித்து, இன்று தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து ஆய்வறிக்கைத் தரவேண்டுமென்று தீர்மானத்தை கொண்டுவரவேண்டும். பாதுகாப்பு பேரவையால் சிறீலங்கா அரசை பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் நிறுத்த ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறப்பு அமர்வுகள் நடத்தப்படவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
#46thSession #unhrc #geneva
#justicefortamilgenocide #may18 #2009 #mullivaikal #tamileelam #unhrc #uno #geneva #swiss #uk #usa #canada #germany #britain #india











